1 *********************************************************************************************************** யாப்பிலக்கணம்: *************************************************************************************************************** • யாப்பிலக்கணம் என்பது செய்யுள் எழுதுவதற்குரிய இலக்கணத்தைக் குறிக்கும். யாத்தல் என்னும் சொல் கட்டுதல் என்னும் பொருளை உடையது. • எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை போன்ற உறுப்புக்களை ஒருசேரக் கட்டி அமைப்பது என்னும் பொருளிலேயே செய்யுள் யாத்தல் என்கிறார்கள். • எனவே இந்த யாத்தலுக்கு உரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். • யாப்பின் உறுப்புகள்: யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை 1.எழுத்து 2.அசை 3.சீர் 4.தளை 5.அடி 6.தொடை யாப்பின் உறுப்புகள்: யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை
2 1. எழுத்து 2. அசை 3. சீர் 4. தளை 5. அடி 6. தொடை • உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொறுத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. • குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். • ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். • நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும்.
3 எழுத்து (யாப்பிலக்கணம்) • யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். • இங்கே எழுத்து என்பது மொழியைஎழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. • செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன. • இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை, • அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். • எழுத்து வகைகள் தமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. • இவற்றுள் அ முதல் ஔ வரையான 12 உயிரெழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. • க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துக்களில் குறில், நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. • மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள், அவற்றில் அடங்கியுள்ள
4 உயிரெழுத்துக்களின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன. எழுத்துவகை எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள் - 1 குறில்கள் அ, இ, உ, எ, ஒ 2 நெடில்கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், மெய்யெழுத்துக்கள் ர், ல், வ், ழ், ள், ற், ன் உயிர்மெய் - எழுத்துக்கள் உயிர்க்குறில்கள் சேர்ந்து உருவான 1 குறில்கள் உயிர்மெய்கள் உயிர்நெடில்கள் சேர்ந்து உருவான 2 நெடில்கள் உயிர்மெய்கள்
5 அசை (யாப்பிலக்கணம் ) மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை எனக் கூறுகிறது. யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன. மாடு அசை போடும்போது வாயைத் திறந்து மூடுவது போல பாடலிலுள்ள சீரில் ஓசை விடுபட்டுச் சேர்வது அசை தொல்காப்பியம் நேர். நிரை. நேர்பு, நிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன.
6 கோழி,வேந்தன் நேர் அசை வெறி,சுறா,நிறம்,குரால் நிரை அசை காது,காற்று,கன்று,காவு,கல்லு நேர்பு அசை வரகு,அரக்கு,மலாடு,பனாட்டு,கதவு,புணர்வு,உருமு,வினவு நிரைபு அசை முதல் எழுத்து இரண்டாம் எழுத்து மூன்றாம் எழுத்து எடுத்துக்காட்டு சரீ ்நிலை குறில் - - அ,க நேர் நெடில் - - ஆ,பூ நேர் குறில் ஒற்று - அன்,விண் நேர் நெடில் ஒற்று - ஆள்,தீர் நேர் குறில் குறில் - அடி,மன நிரை குறில் நெடில் - அடா,புகா நிரை குறில் குறில் ஒற்று அடர்,திகில் நிரை குறில் நெடில் ஒற்று அதால்,தொழார் நிரை சரீ ் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை சீர் வகைகள் செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரையான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை, 1. ஓரசைச்சீர்
7 2. ஈரசைச்சீர் 3. மூவசைச்சீர் 4. நாலசைச்சீர் எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம். சீர்கள் வேறு பெயர்கள் ஓரசைச்சரீ ் அசைச்சீர் ஈரசைச்சரீ ் இயற்சீர்,ஆசிரியச்சீர்,ஆசிரிய உரிச்சீர் மூவசைச்சரீ ் உரிச்சீர் நாலசைச்சரீ ் பொதுச்சீர் ஓரசைச்சரீ ்கள் மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய
8 வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண் ஓரசைச்சரீ ்கள் 1 நேர் நாள் நாள் மலர் 2 நிரை மலர் தே.மா · புளி.மா கரு.விளம் ஈரசைச்சரீ ்கள் கூ.விளம் 1. நேர்-நேர் தேமா 2. நிரை-நேர் புளிமா 3. நிரை-நிரை கருவிளம் 4. நேர்-நிரை கூவிளம்
9 · மூவசைச்சரீ ்கள் 1. நேர்-நேர்-நேர் தேமாங்காய் தே.மாங்.காய் தே.மாங்.கனி 2. நேர்-நேர்-நிரை தேமாங்கனி புளி.மாங்.காய் புளி.மாங்.கனி 3. நிரை-நேர்-நேர் புளிமாங்காய் கரு.விளங்.காய் கரு.விளங்.கனி 4. நிரை-நேர்-நிரை புளிமாங்கனி கூ.விளங்.காய் கூ.விளங்.கனி 5. நிரை-நிரை-நேர் கருவிளங்காய் 6. நிரை-நிரை-நிரை கருவிளங்கனி 7. நேர்-நிரை-நேர் கூவிளங்காய் 8. நேர்-நிரை-நிரை கூவிளங்கனி
10 நாலசைச்சரீ ்கள் 1. நேர்-நேர்-நேர்-நேர் தேமாந்தண்பூ தே.மாந்.தண்.பூ 2. நேர்-நேர்-நேர்-நிரை தேமாந்தண்ணிழல் தே.மாந்.தண்.ணிழல் 3. நேர்-நேர்-நிரை-நேர் தேமாநறும்பூ தே.மா.நறும்.பூ 4. நேர்-நேர்-நிரை-நிரை தேமாநறுநிழல் தே.மா.நறு.நிழல் 5. நிரை-நேர்-நேர்-நேர் புளிமாந்தண்பூ புளி.மாந்.தண்.பூ 6. நிரை-நேர்-நேர்-நிரை புளிமாந்தண்ணிழல் புளி.மாந்.தண்.ணிழல் 7. நிரை-நேர்-நிரை-நேர் புளிமாநறும்பூ புளி.மா.நறும்.பூ 8. நிரை-நேர்-நிரை-நிரை புளிமாநறுநிழல் புளி.மா.நறு.நிழல் 9. நேர்-நிரை-நேர்-நேர் கூவிளந்தண்பூ கூ.விளந்.தண்.பூ 10. நேர்-நிரை-நேர்-நிரை கூவிளந்தண்ணிழல் கூ.விளந்.தண்.ணிழல் 11. நேர்-நிரை-நிரை-நேர் கூவிளநறும்பூ கூ.விள.நறும்.பூ 12. நேர்-நிரை-நிரை-நிரை கூவிளநறுநிழல் கூ.விள.நறு.நிழல் 13. நிரை-நிரை-நேர்-நேர் கருவிளந்தண்பூ கரு.விளந்.தண்.பூ
11 14. நிரை-நிரை-நேர்-நிரை கருவிளந்தண்ணிழல் கரு.விளந்.தண்.ணிழ ல் 15. நிரை-நிரை-நிரை-நேர் கருவிளநறும்பூ கரு.விள.நறும்.பூ 16. நிரை-நிரை-நிரை-நிரை கருவிளநறுநிழல் கரு.விள.நறு.நிழல் தளை (யாப்பிலக்கணம்) தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும். இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. குழலினி(து) யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச்சொல் கேளா தவர் என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக்
12 கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது. குழ.லினி(து) யா.ழினி.து என்.பர் தம்.மக்.கள் நிரை.நிரை நேர்.நிரை.நேர் மழ.லைச்.சொல் கே.ளா நேர்.நேர் நேர்.நேர்.நேர் நிரை.நேர்.நேர் நேர்.நேர் தவர் . நிரை இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சரீ ். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நிலைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும், வருஞ்சீரின் முதற்சீரும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும். இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும். இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன. 1. ஆசிரியத்தளை நேரொன்றிய ஆசிரியத்தளை - நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்)
13 - நிலைச்சீர் ஈற்றசை - நேர் - வருஞ்சீர் முதலசை - நேர் நிரையொன்றிய ஆசிரியத்தளை - நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை - வருஞ்சீர் முதலசை - நிரை 2. வெண்டளை இயற்சரீ ் வெண்டளை சிறப்புடை இயற்சரீ ் வெண்டளை - நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர் - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை. - வருஞ்சீர் - இயற்சீர் சிறப்பில் இயற்சரீ ் வெண்டளை - நிலைச்சீர் - இயற்சீர் (ஈரசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை அல்லது நேர் - வருஞ்சீர் முதலசை - நிலைச்சீர் ஈற்றசை நிரையாயின் நேர், நேராயின் நிரை. - வருஞ்சீர் - வெண்சீர் வெண்சரீ ் வெண்டளை சிறப்புடை வெண்சரீ ் வெண்டளை - நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நேர்
14 - வருஞ்சீர் முதலசை - நேர் - வருஞ்சீர் - வெண்சீர் சிறப்பில் வெண்சரீ ் வெண்டளை - நிலைச்சீர் - வெண்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நேர் - வருஞ்சீர் முதலசை - நேர் - வருஞ்சீர் - வெண்சீர் தவிர்ந்த வேறு சீர்கள் 3. கலித்தளை சிறப்புடைக் கலித்தளை - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நேர் - வருஞ்சீர் முதலசை - நிரை - வருஞ்சீர் - காய்ச்சீர் (நேர் ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்) சிறப்பில் கலித்தளை - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நேர் - வருஞ்சீர் முதலசை - நிரை - வருஞ்சீர் - இயற்சீர் அல்லது கனிச்சீர் (நிரை ஈற்றசை கொண்ட மூவசைச்சீர்) 4. வஞ்சித்தளை ஒன்றிய வஞ்சித்தளை சிறப்புடை ஒன்றிய வஞ்சித்தளை - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை - வருஞ்சீர் முதலசை - நிரை
15 - வருஞ்சீர் - கனிச்சீர் சிறப்பில் ஒன்றிய வஞ்சித்தளை - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை - வருஞ்சீர் முதலசை - நிரை - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள் ஒன்றாத வஞ்சித்தளை சிறப்புடை ஒன்றாத வஞ்சித்தளை - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை - வருஞ்சீர் முதலசை - நேர் - வருஞ்சீர் - கனிச்சீர் சிறப்பில் ஒன்றாத வஞ்சித்தளை - நிலைச்சீர் - உரிச்சீர் (மூவசைச்சீர்) - நிலைச்சீர் ஈற்றசை - நிரை - வருஞ்சீர் முதலசை - நேர் - வருஞ்சீர் - கனிச்சீர் தவிர்ந்த வேறு சீர்கள் அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை) அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன.
16 எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன. அடிகளின் உருவாக்கம் பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. பாலும், 2. தெளிதேனும், 3. பாகும், 4. பருப்புமிவை என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் சீர் என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது. பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்: 1. குறளடி - இரண்டு சீர்கள் கொண்டது.
17 2. சிந்தடி - மூன்று சீர்கள் கொண்டது. 3. அளவடி - நான்கு சீர்கள் கொண்டது. 4. நெடிலடி - ஐந்து சீர்கள் கொண்டது 5. கழி நெடிலடி - ஆறு, ஏழு அல்லது எட்டு சீர்களைக் கொண்டது. 6. இடையாகு கழி நெடிலடி - ஒன்பது அல்லது பத்து சீர்களைக் கொண்டது. 7. கடையாகு கழி நெடிலடி - 11 முதல் 16 வரையான எண்ணிக்கைகளில் சீர்களைக் கொண்டது. தொடை (யாப்பிலக்கணம்) தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை தொடை வகைகள் தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை, 1. மோனைத் தொடை 2. இயைபுத் தொடை 3. எதுகைத் தொடை 4. முரண் தொடை 5. அளபெடைத் தொடை
18 6. அந்தாதித் தொடை 7. இரட்டைத் தொடை 8. செந்தொடை என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது. தொடை விகற்பங்கள் மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் \"விகற்பங்கள்\" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு. 1. அடி 2. இணை 3. பொழிப்பு 4. ஒரூஉ 5. கூழை 6. மேற்கதுவாய் 7. கீ ழ்க்கதுவாய் 8. முற்று மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்தம் நாற்பது தொடை
19 விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது. ************************************************************************************************************************** ⭐ ⭐⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ ⭐ *************************************************************************************************************************** -திருக்குறள்- திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் பழ.முத்துராமலிங்கம் - ஈகரை 1.அறத்துப்பால்-- 1.1 பாயிரவியல்-- 1-1-1 கடவுள் வாழ்த்து-1 அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி பக/வன் முதற்/றே உல/கு தெளிவுரை எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக்
20 கொண்டுள்ளது. அசை 1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு 1.குறிலினை/குறில் 2.குறிலினை/குறில் 3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று 4.நெடில்/குறில் 5.குறிலினை/குற்றொற்று 6.குறிலினையொற்று/நெடில் 7.குறிலினை/குறில் அசை-----------சரீ ்-வாய்ப்பாடு---------தளை 1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை 2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை 3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை 4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை 5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை 6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு எதுகை-அகர- பகவன், முதல-முதற்றே மோனை- முதல-முதற்றே **********************************************************************************************************************
21 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-2 கற்/றத/னால் ஆ/ய பய/னென்/கொல் வா/லறி/வன் நற்/றாள் தொழா/அர் எனின் தெளிவுரை அறிவே வடிவமாக உள்ள ஆண்டவனை வணங்காராயின் அவர் கல்வி பெற்றதனால் பயன் யாது? அசை 1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நிரை/நேர்/ 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை 1. குற்றொற்று/ குறிலினை/ நெட்டொற்று 2. நெடில்/குறில் 3. குறிலினை/ குற்றொற்று/ குற்றொற்று 4. நெடில் / குறிலினை/ குற்றொற்று 5. குற்றொற்று/ நெட்டொற்று 6. குறிலினை/ குற்றொற்று 7. குறிலினையொற்று அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நிரை/நேர் –-கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை 2.நேர்/நேர் ----------தேமா--------------------- இயற்சீர் வெண்டளை
22 3.நிரை/நேர்/நேர் –-புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை 4.நேர்/நிரை/நேர்/---கூவிளங்காய்----------வெண்சீர் வெண்டளை 5.நேர்/நேர் ----------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை 6.நிரை/நேர் --------புளிமா--------------------- இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுச்சீர்>எனின்>நிரை>மலர் ********************************************************************************************************* 1 அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-3 மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார் நில/மிசை நீ/டுவாழ் வார் தெளிவுரை அன்பரது உள்ளத் தாமரையில் உறையும் இறைவன் திருவடிகளை இடையறாது நினைப்போர் இவ்வுலகிலேயே பேரின்ப வாழ்வு பெற்றவராவர் அசை 2.நேர்/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/நேர் 1.நிரை/நிரை 6.நேர்/நிரை 7.நேர் 5.நிரை/நிரை 1.குறிலினையொற்று / குறினெடில் 2.நெடில்/குறினெடிலொற்று 3.நெடில்/ குறிலினை 4.நெட்டொற்று /நெட்டொற்று 5.குறிலினை /குறினெடில் 6.நெடில்/ குறினெடிலொற்று 7.நெட்டொற்று
23 அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நிரை ----கருவிளம்----------- இயற்சீர் வெண்டளை 2.நேர்/நிரை -----கூவிளம் ------------ இயற்சீர் வெண்டளை 3.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை 4.நேர்/நேர்----------தேமா----------------- இயற்சீர் வெண்டளை 5.நிரை/நிரை –---கருவிளம்---------- -இயற்சீர் வெண்டளை 6.நேர்/நிரை ----கூவிளம்------------- இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுசீர்>வார்>நேர்>நாள் எதுகை-மலர்மிசை-நிலமிசை, மோனை-மலர்மிசை- மாணடி, நிலமிசை- நீடுவாழ் ********************************************************************************************************* 1.அறத்துப்பால்-1.1 பாயிரவியல்-1 -1-1 கடவுள் வாழ்த்து-4 வேண்/டுதல்/வேண் டா/மை இலா/னடி சேர்ந்/தார்க்/கு யாண்/டும் இடும்/பை இல அசை 1.நேர்/நிரை/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நிரை 4.நேர்/நேர்/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/ 1. நெட்டொற்று/ குறிலினையொற்று /நெட்டொற்று 2. நெடில்/நெடில் 3. குறினெடில்/ குறிலினை 4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில் 5. நெட்டொற்று/ குற்றொற்று 6./ குறிலினையொற்று /நெடில் 7. குறிலினை அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
24 1.நேர்/நிரை /நேர்------கூவிளங்காய் ---------வெண்சீர் வெண்டளை 2.நேர்/நேர் --------------தேமா------------------இயற்சீர் வெண்டளை 3.நிரை/நிரை --------கருவிளம்------------- இயற்சீர் வெண்டளை 4.நேர்/நேர்/நேர்----- தேமாங்காய் -------- வெண்சீர் வெண்டளை 5.நேர்/நேர் -----------தேமா ------------------ இயற்சீர் வெண்டளை 6.நிரை/நேர் ----------புளிமா ---------------- இயற்சீர் வெண்டளை 7. ஈற்றுசீர்>இல>நிரை>மலர் / எதுகை-வேண்டுதல்வேண்-யாண்டும் மோனை- இலானடி-இடும்பை-இல தெளிவுரை விருப்பும் வெறுப்பும் இயல்பாகவே இல்லாத இறைவணை நிணைப்போர்க்கு எங்கும் எப்போதும் துன்பங்கள் வாரா. ******************************************************************************************************* ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்படீ ியாவில் இருந்து. யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சரீ ்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும் அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும் என்பது தொல்காப்பியர் கூற்று. எடுத்துக்காட்டு : பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
25 இறைவன் அடிசேரா தார் இக்குறளில் \"நீந்துவர்\" \"நீந்தார்\" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து \"ந்\" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன. எதுகை வகைகள் எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை. ..…..…..……………………………….. மோனை…. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்படீ ியாவில் இருந்து. யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று. பொருளடக்கம் 1 மோனையும் அதன் வகைகளும் 2 எடுத்துக்காட்டுகள் 2.1 சீர்மோனைகள் 2.2 அடிமோனைகள் 3 இவற்றையும் பார்க்கவும் மோனையும் அதன் வகைகளும்
26 எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும், அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன. இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது. எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம். ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல். ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல் உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன. உயிரெழுத்து இனங்கள் 1. அ, ஆ, இ, ஔ 2. இ, ஈ, எ, ஏ, யா 3. உ, ஊ, ஒ, ஓ மெய்யெழுத்து இனங்கள் 1. ஞ், ந் 2. ம், வ்
27 3. த், ச் எடுத்துக்காட்டுகள் சீர்மோனைகள் 1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை இந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும். 2. கற்க கசடற கற்றவை கற்றபின் இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும். அடிமோனைகள் தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும் மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது. அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.
28 *************************************************************************************************************** ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-5 இருள்/சேர் இரு/வினை/யும் சே/ரா இறை/வன் பொருள்/சேர் புகழ்/புரிந்/தார் மாட்டு தெளிவுரை நல்விணை தீவிணைகளின் விளைவுகள் இறைவனது மெய்ப்புகழை விரும்பும் அன்பரைத் தீண்டா அசை 1.நிரை/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர் 5.நிரை/நேர் 6.நிரை/நிரை/நேர் 7.நேர்பு 1. குறிலினையொற்று /நெட்டொற்று 2. குறிலினை / குறினெடில்/குற்றொற்று 3.நெடில்/நெடில் 4. குறினெடில் / குற்றொற்று 5. குறிலினையொற்று /குற்றொற்று 6.குறிலினையொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று 7. நெட்டொற்று /பு
29 அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர்--------------புளிமா--------------- இயற்சீர் வெண்டளை 2.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை 3.நேர்/நேர் --------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை 4.நிரை/நேர்--------------புளிமா----------------- இயற்சீர் வெண்டளை 5.நிரை/நேர் ------------புளிமா----------------- இயற்சீர் வெண்டளை 6.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்-----வெண்சீர் வெண்டளை 7.ஈற்றுசீர்>>மாட்டு>>>நேர்பு>>>>காசு எதுகை-இருள்சேர்-இருவினையும்-பொருள்சேர் மோனை- இருள்சேர்-இருவினையும்-இறைவன் ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-6 பொறி/வா/யில் ஐந்/துவித்/தான் பொய்/தீர் ஒழுக்/க நெறி/நின்/றார் நீ/டுவாழ் வார் தெளிவுரை ஐம்பொறிகளின் வழியாகத் தோன்றும் ஆசைகளை ஒழித்த இறைவனது அன்பு நெறியில் நிற்போர் நெடுங்காலம் வாழ்வர் அசை 1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நேர்
30 5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நிரை 7.நேர் 1. குறிலினை / நெடில்/குற்றொற்று 2. நெட்டொற்று /குறிலினையொற்று / நெட்டொற்று 3. குற்றொற்று / நெட்டொற்று 4. குறிலினையொற்று /குறில் 5. குறிலினை / குற்றொற்று / நெட்டொற்று 6.நெடில்/ குறினெடிலொற்று 7.நெட்டொற்று அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர்/நேர் -------புளிமாங்காய்----வெண்சீர் வெண்டளை 2.நேர்/நிரை/நேர் -------கூவிளங்காய்----வெண்சீர் வெண்டளை 3.நேர்/நேர் -----------------தேமா---------------- இயற்சீர் வெண்டளை 4.நிரை/நேர்----------------புளிமா--------------- இயற்சீர் வெண்டளை 5.நேர்/நேர்/நேர் --------தேமாங்காய்----- வெண்சீர் வெண்டளை 6.நேர்/நிரை --------------கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுசீர்>>>வார்>>>நேர்>>>>>நாள் எதுகை- பொறிவாயில் நெறி/நின்/றார் மோனை- பொறிவாயில் -பொய்/தீர் ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-7
31 தனக்/குவ/மை இல்/லா/தான் தாள்/சேர்ந்/தார்க் கல்/லால் மனக்/கவ/லை மாற்/றல் அரி/து தெளிவுரை நிகரற்ற இறைவன் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்க்கு அன்றிப் பிறர்க்கு மனத்தில் தோன்றும் கவலைகளை நீக்குதல் இயலாது அசை 1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நிரை/நேர் 6.நேர்/ நேர் 7.நிரை/பு 1. குறிலினையொற்று / குறிலினை /குறில் 2. குற்றொற்று /நெடில்/நெட்டொற்று 3.நெட்டொற்று / நெட்டொற்று / நெட்டொற்று 4. குற்றொற்று / நெட்டொற்று 5. குறிலினையொற்று / குறிலினை / குறில் 6. நெட்டொற்று / குற்றொற்று 7. குறிலினை /குறில் அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நிரை/நேர் ---கருவிளங்காய்------வெண்சீர் வெண்டளை 2.நேர்/நேர்/நேர்--------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் ------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை 4.நேர்/நேர்----------------தேமா----------------------இயற்சீர் வெண்டளை 5.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்-------வெண்சீர் வெண்டளை 6.நேர்/ நேர--------------தேமா----------------------இயற்சீர் வெண்டளை
32 7.ஈற்றுசீர்>>>அரிது>>>நிரைபு>>>>பிறப்பு எதுகை- தனக்குவமை – மனக்கவலை, இல்லாதான் - கல்லால் மோனை- தனக்குவமை - தாள்சேர்ந்தார்க் , மனக்கவலை மாற்றல் ⭐ ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ பிழை திருத்தம் ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஔ நெடில் அல்லது நெட்டெழுத்துக்கள் ஐ -முதல்- ஒன்றரை மாத்திரை அளவு ஐ-இடையில்-ஒரு மாத்திரை அளவு ஐ-கடையில்- ஒரு மாத்திரை அளவு ஐகாரகுறுக்கம் சீர்யின் முதலில் 'ஐ'வரின் நெடிலாகும் இடை மற்றம் கடையில் 'ஐ'வரின் ஐகார மாத்திரை அளவு குறுகி ஐகாரகுறுக்கம் ஆகி விடும் எ.கா கை-நெடில் கையையே-இதில் முதலில் வரும் கை -நெடில், இடையில் வரும் யை - குறில் வைகை- இதில் முதலில் வரும் வை -நெடில், கடையில் வரும் கை - குறில் பகுதி-9 மலர்/மிசை ஏ/கினான் மா/ணடி சேர்ந்/தார் நில/மிசை நீ/டுவாழ் வார்
33 1.குறிலினையொற்று / குறினெடில்- பிழை திருத்தம் -குறிலினை 2.நெடில்/குறினெடிலொற்று 3.நெடில்/ குறிலினை 4.நெட்டொற்று /நெட்டொற்று 5.குறிலினை /குறினெடில்- பிழை திருத்தம் குறிலினை 6.நெடில்/ குறினெடிலொற்று 7.நெட்டொற்று பகுதி-11 வேண்/டுதல் வேண்/டா/மைஇலா/னடி சேர்ந்/தார்க்/கு யாண்/டும் இடும்/பை இல 1. நெட்டொற்று/ குறிலினையொற்று 2. நெட்டொற்று /நெடில்/நெடில்- பிழை திருத்தம் குறில் 3. குறினெடில்/ குறிலினை 4. நெட்டொற்று / நெட்டொற்று/குறில் 5. நெட்டொற்று/ குற்றொற்று 6./ குறிலினையொற்று /நெடில் 7. குறிலினை பகுதி-18 இருள்/சேர் இரு/வினை/யும் சே/ரா இறை/வன் பொருள்/சேர் புகழ்/புரிந்/தார் மாட்டு 1. குறிலினையொற்று /நெட்டொற்று 2. குறிலினை / குறினெடில்/குற்றொற்று- பிழை திருத்தம்-குறிலினை 3.நெடில்/நெடில் 4. குறினெடில் / குற்றொற்று 5. குறிலினையொற்று /குற்றொற்று
34 6.குறிலினையொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று 7. நெட்டொற்று /பு ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-8 அற/வா/ழி அந்/தணன் தாள்/சேர்ந்/தார்க் கல்/லால் பிற/வா/ழி நீந்/தல் அரி/து தெளிவுரை அறமே உருவான ஆண்டவன் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்க்கு அன்றிப் பிறர்க்கு பிறப்பாகிய கடலைக் கடத்தல் அரிதாம் அசை 1.நிரை/நேர்/நேர் 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை/பு 1. குறிலினை / நெடில்/ குறில் 2. குற்றொற்று / குறிலினையொற்று 3. நெட்டொற்று / நெட்டொற்று / நெட்டொற்று 4. குற்றொற்று / நெட்டொற்று 5. குறிலினை / நெடில்/ குறில் 6. நெட்டொற்று / குற்றொற்று 7. குறிலினை /குறில் அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை
35 1.நிரை/நேர்/நேர் ------புளிமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை 2.நேர்/நிரை --------------கூவிளம்---------------- இயற்சீர் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் --------தேமாங்காய்-----------வெண்சீர் வெண்டளை 4.நேர்/நேர்-----------------தேமா-------------------- -இயற்சீர் வெண்டளை 5.நிரை/நேர்/நேர் -----புளிமாங்காய்----------வெண்சீர் வெண்டளை 6.நேர்/நேர் --------------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை 7.ஈற்றுசீர்>>>அரிது>>>நிரைபு>>>>>பிறப்பு எதுகை- அறவாழி - பிறவாழி , அந்தணன் - நீந்தல் மோனை- அறவாழி – அந்தணன்- அரிது *********************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-1 கடவுள் வாழ்த்து-9 கோ/ளில் பொறி/யிற் குண/மில/வே எண்/குணத்/தான் தா/ளை வணங்/காத் தலை தெளிவுரை அன்பர்க்கு எளியனாய்க் காட்சிதரும் இறைவன் திருவடிகளை வணங்காதார் தலைகள் செயலற்ற பொறிகளைப் போலப் பயனிலவாம்
36 அசை 1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நிரை/நேர் 4.நேர்/நிரை/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை 1.நெடில் / குற்றொற்று 2. குறிலினை / குறியொற்று 3. குறிலினை / குறிலினை /நெடில் 4. குற்றொற்று / குறிலினையொற்று / நெட்டொற்று 5. நெடில்/குறில் 6. குறிலினையொற்று / நெட்டொற்று 7.குறிலினை அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர் ---------------தேமா--------------------இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நேர் -------------புளிமா----------------------இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நிரை/நேர்----கருவிளங்காய்------வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நிரை/நேர்------கூவிளங்காய்--------வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர் ---------------தேமா---------------------இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர் ------------புளிமா--------------------இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுசரீ ்>>>தலை>>>நிரை>>>மலர் எதுகை-கோளில்-தாளை,குணமிலவே-எண்குணத்தான்-வணங்காத் மோனை-கோளில்-குணமிலவே,தாளை-தலை *************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்-
37 1-1-1 கடவுள் வாழ்த்து-10 பிற/விப் பெருங்/கடல் நீந்/துவர் நீந்/தார் இறை/வன் அடி/சே/ரா தார் தெளிவுரை இறைவன் திருவடிகளை நம்பிப் பற்றினோர் மறு பிறவியின்றிப் பேரின்பம் பெறுவர்; அவ்வாறு பற்றாதோர் பிறந்து பிறந்து உழ்வர் அசை 1.நிரை/நேர் 2.நிரை/நிரை 3.நேர்/நிரை 4.நேர்/ நேர் 5.நிரை/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர் 1. குறிலினை / குற்றொற்று 2. குறிலினையொற்று / குறிலினையொற்று 3. நெட்டொற்று/ குறிலினையொற்று 4. நெட்டொற்று / நெட்டொற்று 5. குறிலினை / குற்றொற்று 6. குறிலினை /நெடில்/நெடில் 7. நெட்டொற்று அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர் ------------புளிமா -------------- இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நிரை -----------கருவிளம் -------- இயற்சரீ ் வெண்டளை 3.நேர்/நிரை ------------தேமா---------------- இயற்சரீ ் வெண்டளை 4.நேர்/ நேர்------------தேமா----------------- இயற்சரீ ் வெண்டளை
38 5.நிரை/நேர் ------------புளிமா--------------- -இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர்/நேர் ----புளிமாங்காய்-------வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுசரீ ்>>>தார்>>>நேர்>>>நாள் எதுகை- பிறவிப் - இறைவன் , நீந்துவர் நீந்தார் மோனை- பிறவிப்- பெருங்/கடல், நீந்துவர் நீந்தார் **************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-11 வான்/நின் றுல/கம் வழங்/கி வரு/தலால் தான்/அமிழ்/தம் என்/றுண/ரல் பாற்/று தெளிவுரை மழை தவறாது பெய்வதால் வாழ்க்கை நடைபெற்று வருகிறது; அதனால் மழை உயிர்களுக்கு அமிழ்தம் என நினைக்கத்தகும் அசை 1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நிரை 5.நேர்/நிரை/நேர் 6.நேர்/நிரை/நேர் 7.நேர்பு 1. நெற்றொற்று/ குற்றொற்று 2. குறிலினை/ குற்றொற்று 3. குறிலினையொற்று/ குறில் 4. குறிலினை / குறினெடிலொற்று 5. நெற்றொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று 6.குற்றொற்று / குறிலினை / குற்றொற்று 7. நெற்றொற்று /குறில்
39 அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர்------ --------தேமா-------------------இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நேர்------------ புளிமா----------------- இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நேர் ------------ புளிமா-------------------இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நிரை--------------கருவிளம்-------------இயற்சரீ ் வெண்டளை 5.நேர்/நிரை/நேர் ------கூவிளங்காய்-------வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நிரை/நேர்--------கூவிளங்காய்-------வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுசரீ ்>>>பாற்று>>>நேர்பு>>>காசு எதுகை- வா/ன்/நின்று – தா/ன்/அமிழ்தம் – எ/ன்/றுணரல் மோனை- /வா/ன்நின்று--/ வ/ழங்கி-- –/ வ/ருதலால் ************************************************************************************* 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-12 துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத் துப்/பா/ய தூ/உம் மழை தெளிவுரை உண்போர்க்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும், தானே உணவாவதும் மழையேயாகும் அசை
40 1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்/நேர் 5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை 1. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று 2. குற்றொற்று / நெடில் / குறில் 3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று 4. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று 5. குற்றொற்று / நெடில் / குறில் 6. நெடில் / குற்றொற்று 7. குறினெடில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர்/நேர் ------தேமாங்காய்---------- வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர்/நேர்------- தேமாங்காய்--------- வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்--------- வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்--------- வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர் ------------தேமா------------------ இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுசரீ ்>>>>மழை>>>நிரை>>>மலர் எதுகை- துப்/பார்க்/குத் - துப்/பா/ய - துப்/பாக்/கித் - துப்/பார்க்/குத் துப்/பா/ய மோனை- துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத் துப்/பா/ய தூ/உம் ****************************************************************************************
41 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-13 விண்/ணின்/று பொய்ப்/பின் விரி/நீர் விய/னுல/கத் துண்/ணின் றுடற்/றும் பசி தெளிவுரை மழை உரிய காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் இப்பரந்த உலகத்து உயிர்களை எல்லாம் பசி கடுமையாக வருத்தும் அசை 1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை /நிரை/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை 1. குற்றொற்று/குற்றொற்று / குறில் 2. குற்றொற்று / குற்றொற்று 3.குறிலினை/ நெற்றொற்று 4. குறிலினை /குறிலினை / குற்றொற்று 5. குற்றொற்று / குற்றொற்று 6. குறிலினையொற்று/ குற்றொற்று 7. குறிலினை அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்------- வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர் ---------------- தேமா----------------- இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நேர் ----------------புளிமா------- --------இயற்சரீ ் வெண்டளை
42 4. நிரை/நிரை/நேர்------கருவிளங்காய்---வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர் -----------------தேமா----------------- இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர் ----------------புளிமா------------------ -இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>பசி>>>நிரை>>>மலர் எதுகை- பொ/ய்/ப்பின்- வி/ய/னுலகத் மோனை- /வி/ண்ணின்று –/வி/ரிநீர் - /வி/யனுல/கத் ..….……….…… விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத் துண்ணின் றுடற்றும் பசி . என்பது குறள் . ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-14 ஏ/ரின் உழா/அர் உழ/வர் புய/லென்/னும் வா/ரி வளங்/குன்/றிக் கால் தெளிவுரை மேகம் மழையாகிய பயணைத் தராவிடில் உழவர் தம் உழுதொழிலை நிறுத்திவிடுவர் அசை
43 1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர் 1. நெடில் / குற்றொற்று 2. குறினெடில்/ குற்றொற்று 3. குறிலினை/ குற்றொற்று 4. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று 5. நெடில்/ குறில்- 6. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று 7.நேர் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர் ---------- தேமா---------- இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சரீ ் வெண்டளை 3.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்---- வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர் ---------- தேமா----------- இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்--- வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>கால்>>>நேர்>>>>நாள் எதுகை- ஏரின் - வாரி , உழாஅர் - உழவர் மோனை- உழாஅர் - உழவர் ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-15
44 கெடுப்/பதூ/உம் கெட்/டார்க்/குச் சார்/வாய்/மற் றாங்/கே எடுப்/பதூ/உம் எல்/லாம் மழை தெளிவுரை மக்களை பெய்யாது கெடுப்பதும், பெய்து கெடுப்பதும் மழையே அசை 1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை 1. குறிலினையொற்று/ குறினெடில்// குற்றொற்று 2. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று 3. நெற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று 4. நெற்றொற்று / நெடில் 5. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று 6. குற்றொற்று / நெற்றொற்று 7.நிரை அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நிரை/நேர் ----- கருவிளங்காய்----- வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்-------------------தேமா------------------- இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நிரை/நேர்------ கருவிளங்காய்------ வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர் ------------------தேமா---------------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>மழை>>>நிரை>>>மலர்
45 எதுகை- கெடுப்பதூஉம் - எடுப்பதூஉம் மோனை- கெடுப்பதூஉம் - கெட்டார்க்குச், எடுப்பதூஉம் -எல்லாம் ****************************************************************************************** 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-16 விசும்/பின் துளி/வ/ீழின் அல்/லால்/மற் றாங்/கே பசும்/புற் றலை/காண் பரி/து தெளிவுரை மேகத்திலிருந்து துளிநீராயினும் விழுந்தாலன்றி பூமியில் புல்லும் முளைக்காது அசை 1.நிரை/நேர் 2.நிரை/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு 1. குறிலினையொற்று/ குற்றொற்று 2. குறிலினை//நெடில்/ குற்றொற்று 3. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று 4. நெற்றொற்று/ நெடில் 5. குறிலினையொற்று/ குற்றொற்று 6. குறிலினை/ நெற்றொற்று 7. குறிலினை/ குறில்
46 அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நேர் ------------ புளிமா-------------- இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நேர்/நேர் ---- புளிமாங்காய்------ வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய்------- வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்----------------- தேமா------------------ இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நேர் -------------- புளிமா---------------- இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர் -------------- புளிமா--------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு எதுகை- வி//சு//ம்பின் – ப//சு//புற் , அ//ல்//லால்மற் – ற//லை//காண் மோனை- //ற//லைகாண்- //றா//ங்கே ……………… விசும்பின் துளிவழீ ின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது . என்று எழுதவேண்டும் . ************************************************************************************ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-17 நெடுங்/கட/லும் தன்/நீர்/மை குன்/றும் தடிந்/தெழி/லி தான்/நல்/கா தா/கி விடின் தெளிவுரை கடலின் நீரை முகந்து செல்லும் மேகம், மீண்டும் மழையைப்
47 பொழியவிடில் பெரிய கடலும் காலப் போக்கில் வற்றிவிடும் அசை 1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர் 5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை 1. குறிலினையொற்று / குறிலினை/ குற்றொற்று 2. குற்றொற்று/ நெற்றொற்று / குறில் 3 குற்றொற்று/ குற்றொற்று 4. குறிலினையொற்று / குறிலினை/ குறில் 5 நெற்றொற்று/ குற்றொற்று / நெடில் 6. நெடில்/ குறில் 7. குறிலினையொற்று அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நிரை/நிரை/நேர் -----கருவிளங்காய்----- வெண்சரீ ் வெண்டளை 2.நேர்/நேர்/நேர் -------தேமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர் -----------------தேமா ---------------- இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நிரை/நேர்----- கருவிளங்காய்----- வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர்/நேர்--------- தேமாங்காய்-------- வெண்சரீ ் வெண்டளை 6.நேர்/நேர்-----------------தேமா----------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>விடின்>>>நிரை>>>மலர் எதுகை- தன்நீர்மை- குன்றும்- தான்நல்கா மோனை- தன்நீர்மை- தடிந்தெழிலி- தான்நல்கா- தாகி ********************************************************************************
48 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-18 சிறப்/பொடு பூ/சனை செல்/லா/து வா/னம் வறக்/குமேல் வா/னோர்க்/கும் ஈண்டு தெளிவுரை மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா. அசை 1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர் 5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு 1. குறிலினையொற்று/ குறிலினை 2.நெடில் / குறிலினை 3. குற்றொற்று /நெடில் /குறில் 4. நெடில் / குற்றொற்று 5. குறிலினையொற்று/ குறினெடிலொற்று 6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று 7. நெற்றொற்று குறில் அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை
49 1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சரீ ் வெண்டளை 2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சரீ ் வெண்டளை 4.நேர்/நேர்------------- தேமா--------------- இயற்சரீ ் வெண்டளை 5.நிரை/நிரை--------- கருவிளம்-------- இயற்வெண்டளை 6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு எதுகை- சி’”ற’”ப்பொடு - வ”ற”க்குமேல் மோனை- “சி”றப்பொடு -“செ”ல்லாது, “வா”னம்- “வ”றக்குமேல் - “வா”னோர்க்கும் …………. வறக்குமேல் என்பது ஈரசைச் சொல் . வறக் / குமேல் என்று அசை பிரிக்கவேண்டும் . குறில்நெடில் இணைந்து வரினும் , ஒற்றடுத்து வரினும் நிரை அசையாகும் . ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐ 1.அறத்துப்பால்- 1.1 பாயிரவியல்- 1-1-2 .வான் சிறப்பு-19 தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம் வா/னம் வழங்/கா தெனின் தெளிவுரை மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் , தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.
50 அசை 1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர் 5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை 1. நெடில் / குற்றொற்று 2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று 3. குற்றொற்று / நெடில் 4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று 5. நெடில் / குற்றொற்று 6. குறிலினையொற்று/ நெடில் 7. குறிலினையொற்று அசை-------------------சரீ ்-வாய்ப்பாடு-----------தளை 1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சரீ ் வெண்டளை 2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சரீ ் வெண்டளை 3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சரீ ் வெண்டளை 4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சரீ ் வெண்டளை 5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சரீ ் வெண்டளை 6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சரீ ் வெண்டளை 7.ஈற்றுச்சரீ ்>>>தெனின்>>>நிரை>>>மலர் எதுகை- தானம் - வானம் மோனை- தானம் தவம்இரண்டும் தங்கா , வானம் வழங்கா ………………………………………….. தவமிரண்டும் , வியனுலகம் என்று சேர்த்து எழுதவேண்டும் .
Search
Read the Text Version
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- 151
- 152
- 153
- 154
- 155
- 156
- 157
- 158
- 159
- 160
- 161
- 162
- 163
- 164
- 165
- 166
- 167
- 168
- 169
- 170
- 171
- 172
- 173
- 174
- 175
- 176
- 177
- 178
- 179
- 180
- 181
- 182
- 183
- 184
- 185
- 186
- 187
- 188
- 189
- 190
- 191
- 192
- 193
- 194
- 195
- 196
- 197
- 198
- 199
- 200
- 201
- 202
- 203
- 204
- 205
- 206
- 207
- 208
- 209
- 210
- 211
- 212
- 213
- 214
- 215
- 216
- 217
- 218
- 219
- 220
- 221
- 222